Mittwoch, November 24, 2004

குழந்தைகளைத் தாக்கும் - ஆட்டிஸம் (மதி இறுக்கம்) - நோய்

- குமுதத்திலிருந்து -

மகன் சுதிர் சிறிது நாட்களாகவே காரணமின்றி மற்ற குழந்தைகளைத் தாக்குவது பிரேமாவுக்கு பெரும் கவலையாகிவிட்டது. எதன் மீதும் நாட்டமில்லாமல் இருப்பதும், காயம்பட்டால் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதுமாக சுதிர் இருக்கிறான். டாக்டரிடம் அழைத்துப் போய் காட்டியதில் அவனுக்கு ஆட்டிஸம் என்று சொல்லிவிட்டார்கள்.

ஆட்டிஸம் (மதி இறுக்கம்) என்பது மூளையின் முக்கியச் செயல்பாடுகளான பேச்சுத்திறன். சமுதாயத் தொடர்பு மற்றும் புலன் உணர்வுகளை பாதிக்கும் ஒரு வளர்ச்சிக் குறைவு நோயாகும். ஆட்டிஸ நோய்க்கென்று தனிப்பட்ட குணாதிசயங்கள் இருந்தாலும் இந்த நோய் பாதித்த ஒவ்வொருவரும் வேறுபடுவர். ஒரு நோயாளியிடம் காணும் குண நலன்களை நாம் மற்றொருவரிடம் அதேபோல் எதிர்பார்ப்பதோ காண்பதோ அரிது.

ஆட்டிஸ நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பின்வரும் குணாதிசயங்களை வெளிப்படுத்தலாம்.

யார் முகத்தையும் பார்க்காமல் இருத்தல்.

காது கேளாதது போல் இருத்தல்.

நன்கு பேசத்துவங்கிய ஒரு குழந்தையின் பேச்சுத் திறன் படிப்படியாக குறைதல்.

யார் மீதும் நாட்டம் கொள்ளாமல் இருத்தல்.

காரணமின்றி மற்றவர்களைத் தாக்குதல்.

தன் சிறைப்பட்டிருத்தல்.

சில பொருட்களின் மீது அபரிமித ஈர்ப்பை வெளிப்படுத்துதல்.

தொடர்ந்து அர்த்தமற்ற செயல்களைச் செய்தல்... உதாரணமாக கையை உதறுதல், உடலை முன்னும் பின்னும் அசைத்தல்.

அதிக வலியைத் தாங்கிக் கொள்ளுதல் மற்றும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.
இந்த குழந்தைகளின் விளையாடும் முறைகளையும் உறவினர்களிடம் பழகும் வேறுபாடான முறைகளையும் வைத்து அக்குழந்தைகள் மற்ற குழந்தைகளிடமிருந்து மாறுபட்டுள்ளது என்பதை பெற்றோர்கள் அறிய இயலும்.

ஆரோக்கியமாக வளர்ந்து வரும் குழந்தைகளில் கூட இக்குணாதிசயங்கள் காணப்படலாம். நன்கு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென மௌனமாகவோ அல்லது ஆக்ரோஷமாகவோ, மற்ற குழந்தைகளுடன் சேராமல் தன்சிறைப்பட்டோ, தன்னைத் தானே தாக்கிக் கொண்டிருக்குமானால் இயல்பான நிலையிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

ஆட்டிஸம் எவ்வாறு கணிக்கப்படுகிறது:
இந்நோயின் தாக்கத்தை மருத்துவ நிபுணர்கள் மற்றும் இதற்கென்று பிரத்யேக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கணிக்கிறார்கள்.இந்நிலையை கணிக்க உதவும் சில சான்றுகள்.

சமுதாயத்தோடு ஒன்றிவாழும் குணம் இல்லாமை.

குறைந்த அல்லது முற்றிலுமான பேச்சுத்திறன் இல்லாமை.

அர்த்தமற்ற செய்கைகள், நடத்தைகள் ஈடுபாடுகள்.
இது இனம் பிரிக்க முடியாத ஒரு கலவையான குணாதிசயங்கள் கொண்ட நோய். ஒவ்வொரு நோயாளியிடமும் இதன் பிரதிபலிப்பு குறைந்த அளவிலிருந்து அதிக அளவு வரை வேறுபடும். மற்ற நோய்களைப் போல நடைமுறையில் உள்ள இரத்த பரிசோதனைகள் மூலமாகவோ அல்லது எக்ஸ் கதிர்கள் மூலமாகவோ இந்த நோயைக் கண்டறிய முடியாது.

ஆனால் நவீன ஆய்வின் மூலம் ஆட்டிஸ நோயுள்ள குழந்தைகளிடம் சில வேதியியல் மாற்றங்களை கண்டு பிடித்துள்ளனர். மேலும் (Positron Emission Tomograpy) PET பரிசோதனை, மற்றும் (ELECTRO Enccphalogram) EEG (Magnetic Resonance Imaging) பரிசோதனைகள், நோயைப் பற்றிய ஆராய்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. ஆட்டிஸம் என்று சந்தேகம் வந்த பிறகு அதனை உறுதிப்படுத்த ஆட்டிஸ நோயில் தேர்ச்சி பெற்ற, மனநல மருத்துவர், குழந்தைகள் மனோதத்துவ நிபுணர், குழந்தை நல மருத்துவர் காது, மூக்கு, தொண்டை நிபுணர் போன்ற நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.

ஆட்டிஸ நோய் நிபுணர்கள், இந்நோயை உறுதிசெய்ய பலவிதமான செய்முறைகளை கையாள்கிறார்கள். அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட சில அளவுகோல்களைப் பயன்படுத்தி அக்குழந்தைகளைக் கூர்ந்து கவனித்தபிறகு அவர்களுடைய மொழித்திறனையும், சமுதாயப் பழக்க வழக்கங்களையும் அளவிடுகிறார்கள். அந்தக் குழந்தைகளின் நடை, உடை, பாவனை பற்றியும் வளர்ச்சியைப் பற்றியும் பெற்றோர்கள் மத்தியில் நேர்காணல் நடத்துவர். அதன் பிறகு, நோயின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு சிகிச்சை முறைகளை முடிவு செய்வர்.

உலகத்தில் ஆட்டிஸ நோயின் தாக்கமும் அதற்கான காரணங்களும்
தற்போதைய கணக்கெடுப்பின் படி ஆட்டிஸ நோய் உலகமெங்கும் பரவலாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 6,00,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதும் பல நாடுகளில் லட்சக்கணக்கான குழந்தைகள் இந்நோயால் இன்னல்படுகின்றனர். முறையான மருத்துவ சிகிச்சை இல்லாததே இந்நோயின் கட்டுப்பாடற்ற பெருக்கத்திற்குக் காரணம். இதை குணமாக்குவதற்காக பல ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றாலும் மேற்கத்திய மருத்துவ முறையில் இதற்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆட்டிஸ நோய்க்கான காரணங்கள்:
ஆட்டிஸ நோய்க்கு இதுதான் முக்கியமான காரணமென்று தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனினும் உலகெங்கிலும் பல ஆண்டுகளாக ஆட்டிஸ நோய் தொடர்பாக நடந்து வரும் பல ஆராய்ச்சிகள் மூலமாக பின்வரும் நோய்த் தன்மைகள் அடிப்படை காரணங்களாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மரபியல் ரீதியாக நோய்ப்படுதன்மை கொண்ட குழந்தைகள், சுற்றுப்புறசூழலில் உள்ள கிருமிகள், நச்சுப் பொருட்கள் வாயிலாக கருவிலோ அல்லது பிறந்த பின்போ பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பு அவர்களின் நரம்பு மண்டலம் மற்றும் மூளையைத் தாக்குகிறது. பாதிக்கப்பட்ட இக்குழந்தைகளின் ஜீரண மண்டல உறுப்புகள் சீரியமுறையில் இயங்குவதில்லை. ஜீரண அமிலங்கள் சரிவர சுரக்காதிருத்தல், மலச்சிக்கல் முதலிய உபாதைகளால் ஏற்படும் நச்சுப்பொருட்கள் இக்குழந்தைகளின் பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலத்தை தொடர்ந்து பாதிக்கின்றன.

நம் ஆரோக்கியத்தின் பாதுகாவலர்களான நோய் எதிர்ப்பு உறுப்புகள், நம் உடலின் பாகங்களையே உடலைத்தாக்கும் எதிரிகளாகப் பாவித்து தாக்கும் தன்மை, இக்குழந்தைகளிடம் காணப்படுகின்றது. இந்நோய் வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பாதிப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணமாகும்.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைகளை இச்சமுதாயத்துடன் இணைந்து வாழ வைக்க முடியுமா?...
முடியும். தங்கள் குழந்தைகளைப் பற்றிய பெற்றோர்களின் கனவுகள், தங்கள் குழந்தைக்கு ஆட்டிஸ நோய்தான் என்று தெரிந்தவுடன் கலைகிறது. அந்த தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, இந்நோயை ஏதேனும் மந்திர தந்திரங்களால் மாற்றிவிட முடியாதா என்று எண்ணுவார்கள்.

மற்றும் சிலர், மருத்துவர்களை மாற்றுவதன் மூலம் தங்கள் காதுகளுக்கும் மனத்திற்கும் இதமான கூற்றுகளை வேறு மருத்துவர் சொல்லுவார்கள் என்று எதிர்பார்ப்பர். உண்மை நிலையை எதிர்கொள்ளும் சக்தியின்றி இவ்வாறாக மனச்சாந்தி பெறுவதற்கு செய்யும் செயல்கள், குழந்தையின் முன்னேற்றத்தையும் நலத்தையும் பாதிக்கும். பெற்றோர்களும் அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் இத்தகைய வீண் முயற்சிகளால் காலம் கடத்தாமல், உபயோகமான மருத்துவ முறைகளைப் பின்பற்றி தங்கள் குழந்தைகளின் நலமான எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது மிக மிக முக்கியம்.

ஆட்டிஸ நோய்க்கு நிரந்தரக் குணமளிக்கும் சிகிச்சைமுறை என்பது இன்று வரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இக்குழந்தைகளின் தினசரி செயல்பாடுகளை முன்னேற்றமடைய செய்ய முடியும்.

இந்நோயை தகுந்த நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையும், சிறப்புக் கல்வியும் அளித்து குடும்பத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் முயற்சித்தால் மதியிறுக்க நோயை வெல்ல முடியும்.

இந்நோய் உள்ள குழந்தையின் பெற்றோர்களும், குடும்பத்தினரும் முயற்சித்தால்... சிறப்புக் கல்வியாலும், தகுந்த சிகிச்சை முறையாலும் அக்குழந்தை பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகள், சமையல்கலை, சலவை செய்தல், பணத்தைக் கையாளுதல் போன்ற தேவையான சுயவேலைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். இம்மாதிரியான குழந்தைகளுக்குத் தனிக் கவனம் செலுத்தி கற்றுக் கொடுக்கும் போது அக்குழந்தைகள் படிப்பறிவில் சிறந்து விளங்கக் கூடும்.

ஒரு குழந்தை தகுந்த நேரத்தில் பயிற்சி பெற்றால், அது வெகுவிரைவில் சுயசார்பு திறமைகளை வளர்த்துக் கொள்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இந்நோயின் வீரியத்தையும், தன்மையையும் கட்டுப்படுத்த நடந்த பல ஆராய்ச்சிகள் மூலம், பெற்றோர்களே, தன் குழந்தைகளுக்கான முதல் ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்க உரிய முறைகளை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

அமெரிக்க தேசிய மனநல ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மதியிறுக்க நோயைப் பற்றி எண்ணில் அடங்கா ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

1. இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையில் காணப்படுகிற பாதிப்புகளை சரிசெய்வதற்கான மருந்துகளோ, சிகிச்சை முறைகளோ இல்லாதது பெற்றோர்களுக்கும், வல்லுநர்களுக்கும் பெரிய இழப்பாக இருக்கிறது.

2. இந்நோய்க்கு சில மருந்துகள் கையாளப்பட்டாலும் அவை பிற்காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத பின்விளைவுகளை ஏற்படுத்துவதால் அவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

3. இன்று வரை இந்நோய்க்கு எந்த மருந்தும் ஹிஷி திஞிகிவால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே ஆட்டிஸ நோய்க்கு பலன் தரக்கூடிய மற்றும் பாதுகாப்பான மருந்துகள் இல்லாத நிலையில், உலக மருத்துவ சமுதாயம் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது.

பாரதத்தில் ஒரு புதிய சகாப்தம்:
இத்தகைய சூழலில் ஆட்டிஸ நோய்க்கு உபயோகமான மருத்துவ உதவி கிடைக்குமா? என்ற கேள்விக்கு பாரத மண்ணில் தோன்றிய பதில்தான்_ ‘ஒருங்கிணைந்த மருத்துவம்.’

சித்தா, ஆயுர்வேதம், யோகா போன்றவை நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட மகத்தான மருத்துவமுறைகள். ஆராய்ச்சியால் விடை காண முடியாத புதிரான நோய்களுக்கு நம் முன்னோர்கள் தங்களது உள்நோக்கையும் இயற்கையான மூலிகைகளையும் பயன்படுத்தி குணமளித்ததை பண்டைய நூல்களின் மூலம் நாம் அறிகிறோம். நம் தேக ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் நம் உள்மனதிற்கு உண்டு (Selfhealing capacity) என்னும் உண்மையை அறிந்து தங்களது மருத்துவ முறைகளில் அதை நம் முன்னோர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தனர்.

அத்தகைய பாரம்பரிய மருத்துவமுறைகளை, நவீன மருத்துவ முறைகளால் ஆராய்ந்து, அவற்றை செம்மைப்படுத்தி, இணைந்து பயன்படுத்தும் முறைதான் ஒருங்கிணைந்த மருத்துவம். இம்மருத்துவமுறையில், பாரம்பரிய மருத்துவமுறைகளில் இருக்கும் உன்னத கோட்பாடுகளை நவீன மருத்துவம் உணர்ந்து, இணைந்து செயல்படுகின்றது.

இத்தகைய இணைந்த மருத்துவ இயக்கத்தை ஆட்டிஸ நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உபயோகப்படுத்த உருவான மையம்தான் ஞி.ளி.கி.ஷி.ஜி. (D.O.A.S.T. (Doctrine Oriented Art of Symbiotic Treatment). ஒருங்கிணைந்த மருத்துவ மையம்.

ஆட்டிஸத்திற்கு ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறை :_
யோகா, சித்தா, ஆயுர்வேத மருத்துவக் கலைகளில் தேர்வு செய்யப்பட்ட, மருத்துவ முறைகள் ஒருங்கிணைந்த மருத்துவ மையத்தில் மதியிறுக்க நோய் வாய்ப்பட்டவர்க்கு அளிக்கப்படுகின்றன.

ஆய்வு செய்யப்பட்ட சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்தவும் வலுவேற்றவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் இக்குழந்தைகளின் பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலம் செப்பனிடப்படுகிறது.

இம்முறைகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும். மறைந்திருக்கும் செயல் ஆற்றல் திறனை வெளிப்படுத்தி நரம்பு மண்டலத்தை சீர்படுத்துகின்றன. (Self healing capacity)

உபயோகப்படுத்தப்படும் மருந்துகள், நோய் எதிர்ப்புச் சக்தியை சீர்படுத்துவதன் மூலம் தன்னைத்தானே பாதித்துக்கொள்ளும் நோய்த்தன்மையை (Auto immunity) வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்துகின்றன.

Reflexogy முறையினால் குறைபாடுள்ள உறுப்புகளின் செயல்பாடுகள் செம்மைப்படுத்தப்படுகின்றன.

Reiki முறையினால் எங்கும் வியாபித்துள்ள Cosmic energy துணை கொண்டு மனநிலை கோளாறுகள் குணப்படுத்தப்படுகின்றன.

இம்மையத்தில் (D.O.A.S.T.) ஆட்டிஸம் எனும் இனம் புரியாத இந்த மூளை செயல்திறன் குறைநோய்க்கு. நம் முன்னோர்கள் வடிவமைத்த பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி விடை காணப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Nantri - Kumutham

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.